கர்நாடகத்தில் போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை
கர்நாடகத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில டி.ஜி.பி. நீலமணி ராஜூ பேசினார்.
பெங்களூரு,
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பெங்களூரு நிருபதுங்கா ரோட்டில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று போதைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்கு குறித்த கருத்தரங்கம் நடந்தது.
இந்த கருத்தரங்கத்தை கர்நாடக முன்னாள் டி.ஜி.பி. அஜய்குமார் சிங் தொடங்கி வைத்தார். கருத்தரங்கத்தில் போதைப்பொருள் தொடர்பான வழக்கு மற்றும் சட்ட விதிமுறைகள் பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டது. கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு கர்நாடக டி.ஜி.பி. நீலமணி ராஜூ பேசியதாவது:-
கர்நாடகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகம் உள்ளது. தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளை மையமாக கொண்டு போதைப்பொருட்களை அதன் விற்பனையாளர்கள் விற்கிறார்கள். இதனால், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நவீன யுக்திகளை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தும் நபர்களை கண்டுபிடித்து போதைப்பொருள் கடத்தலை தடுக்க வேண்டும். விமானம் மற்றும் கப்பல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரப்படுவதை தீவிரமாக கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும்.
போதைப்பொருள் பயன்படுத்துபவர்களை திருத்த அவர்களின் குடும்பத்தினர் முன்வர வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி எடுத்து கூறுவதுடன், போதைப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் பற்றி பொதுமக்களிடம், போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. எனவே, போலீசார் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு கர்நாடகத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முழுவதுமாக கட்டுப்படுத்தும் நோக்கில் பணி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட பிற உயர் போலீஸ் அதிகாரிகளும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பது மற்றும் அதுதொடர்பான வழக்குகளை எப்படி கையாள்வது என்பது பற்றி பேசினார்கள்.