அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்; பெண் கைது

மும்பை சார்க்கோப் செக்டர் 8-ம் பகுதியில் விபசாரம் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் போலி வாடிக்கையாளரை அங்கு அனுப்பி சோதனை நடத்தினர்.

Update: 2018-06-26 23:39 GMT
மும்பை,

36 வயதுடைய பெண் அங்கிருந்த இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருக்க செல்வந்த இளைஞர்களிடம் ரூ.1 லட்சத்திற்கு பேரம் பேசி விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணை பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் ராஜஸ்தானை சேர்ந்த இளம்பெண்ணை பெற்றோரிடம் பேரம் பேசி மும்பைக்கு கடத்தி வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்