அவினாசிபாளையத்தில் பரிதாபம்: லாரி-ஆம்புலன்ஸ் மோதல்; 2 பேர் பலி
அவினாசிபாளையத்தில் லாரி-ஆம்புலன்ஸ் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
பொங்கலூர்,
அவினாசிபாளையத்தில் லாரி-ஆம்புலன்ஸ் மோதிக்கொண்ட விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூரை அடுத்த நல்லூர் பொன்முத்து நகரை சேர்ந்தவர் ஜோதிராஜ் (வயது 50). ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த அவரை திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 23-ந்தேதி சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்பதால், ஜோதிராஜை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அம்பிளிகையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்க முடிவு செய்தனர். இதையடுத்து ஜோதிராஜை ஒரு ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு அம்பிளிகை நோக்கி நேற்று இரவு புறப்பட்டு சென்றனர்.
ஆம்புலன்சை முத்து என்பவர் ஓட்டினார். ஆம்புலன்சில் ஜோதிராஜின் மனைவி பிரியா (47), இவரின் தங்கை ஞானசெல்வம் (40) மற்றும் பிரியாவின் உறவினர்கள் ஜான்சி (40), ஜான்சியின் மகன் பெலிக்ஸ் (14), சங்கீதா(25) ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.
இந்த ஆம்புலன்ஸ் திருப்பூர்- ஒட்டன்சத்திரம் சாலையில் பொங்கலூர் அருகே உள்ள அவினாசிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது கோவையில் இருந்து சிமெண்டு மூடைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி, ஒட்டன்சத்திரம்-திருப்பூர் சாலை அவினாசிபாளையத்தில் இருந்து காங்கேயம் சாலையில் திரும்பியது. அப்போது லாரியும், ஆம்புலன்சும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் நொறுங்கியது. இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த பிரியா மற்றும் ஞானசெல்வம் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் விபத்தில் ஜோதிராஜ், ஆம்புலன்ஸ் டிரைவர் முத்து, ஜான்சி, பெலிக்ஸ், சங்கீதா ஆகிய 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர்
உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று படு காயம் அடைந்தவர்களை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஜான்சிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அவினாசிபாளையம் போலீசார் விரைந்து சென்று விபத்தில் பலியான பிரியா மற்றும் ஞானசெல்வம் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து நடந்ததும் லாரியில் இருந்து இறங்கி தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.