பசுமைச்சாலை திட்டம் குறித்து முதல்-அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் - கருத்து கேட்பு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ்
பசுமைச்சாலை திட்டம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்த வேண்டும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
போளூர்,
சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிலோ மீட்டர் தூரம் அமைகிறது. இதற்காக 1,100 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்த உள்ளது. போளூர் பகுதியில் ராந்தம், பெலாசூர், விளாப்பாக்கம் ஆகிய கிராமங்களிலும், அல்லியாளமங்கலம் காப்பு காட்டு பகுதியிலும் பசுமை வழிச் சாலை செல்கிறது.
இந்த நிலையில் பசுமைச்சாலை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் பா.ம.க. சார்பில் போளூரை அடுத்த ராந்தம் கிராமத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கருத்து கேட்டார். இதில் விளாப்பாக்கம், ராந்தம், பெலாசூர், பில்லூர், காம்பட்டு, ஆத்துரை, உலகம்பட்டு உள்பட பல கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதில் விவசாயிகள் ‘நிலத்தை கையகப்படுத்தினால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் எங்களது மூதாதையர் நிலம் வருமா?, நிலம் இல்லை என்றால் கூலி வேலைக்கு சென்று எப்படி குடும்பத்தை காப்பாற்றுவது. குழந்தைகளின் கல்விக்கு என்ன செய்வது. சாலை வேண்டாம், நிலம் தான் வேண்டும்’ என்று ஒட்டு மொத்தமாக கண்ணீர் மல்க தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
பின்னர் டாக்டர் அன்புமணி ராம்தாஸ் எம்.பி. பேசியதாவது:-
மத்திய, மாநில அரசுகள் மக்கள் கேட்கும் திட்டத்தை தான் கொண்டு வர வேண்டும். 8 வழி பசுமைச் சாலை வேண்டும் என்று யார் கேட்டார்கள். சென்னை மக்களும் கேட்கவில்லை, சேலம் மக்களும் கேட்கவில்லை. சென்னையில் இருந்து சேலத்திற்கு 3 வழியாக சாலைகள் உள்ளன. சென்னை- சேலம் ஊளுந்தூர்பேட்டை வழியாகவும், வாணியம்பாடி வழியாகவும், கிருஷ்ணகிரி வழியாகவும் செல்லலாம்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பசுமைச்சாலை திட்டம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும். மக்களிடம் சரி, யாரிடமும் கருத்து கேட்பது இல்லை. மக்கள் சொத்தை அபகரிக்கிறது. பசுமையை அழிக்கிறது. சென்னை- சேலம் சாலைகளை அகலப்படுத்தினாலே போதும், புதிய பசுமைசாலை தேவையில்லை. விவசாயிகளாகிய உங்கள் கருத்துகளை பதிவு செய்து அறிக்கை தயாரித்து மத்திய, மாநில அரசு நெடுஞ்சாலைத் துறையிடம் அளித்து நல்ல தீர்வு கொண்டு வருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதில் முன்னாள் எம்.பி. துரை, முன்னாள் எம்.எல்.ஏ. எதிரொலிமணியன், மாவட்ட உழவர் பேரவை தலைவர் எழுமலை, நகர தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்யாறு, செங்கத்தில் கருத்து கேட்பு கூட்டம் ரத்து
செய்யாறு தாலுகா அனப்பத்தூர் கூட்ரோட்டில் பா.ம.க. சார்பில், சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் சந்திப்பு மற்றும் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பு துண்டு பிரசுரங்கள் செய்யாறு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு விவசாயிகளிடம் கருத்து கேட்க இருந்தார். அதற்காக அனப்பத்தூர் கூட்ரோட்டில் பொதுமக்கள் அமர இடத்தினை தூய்மைப்படுத்தி தயார் நிலையில் இருந்தது.
இந்த நிலையில் அப்பகுதியில் கூட்டம் நடத்திட முன்னாள் எம்.பி மு.துரை, போலீஸ் துணை சூப்பிரண்டு குணசேகரனிடம் அனுமதி கேட்டு மனு அளித்ததாகவும், மாவட்டத்தில் ஒரு இடத்தில் மட்டுமே கூட்டம் நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அனப்பத்தூர் கூட்ரோட்டில் கூட்டம் நடத்திட அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அன்புமணி ராமதாஸ் மக்கள் சந்திப்பு - விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதேபோல செங்கத்தை அடுத்த மண்மலை கிராமத்தில் நடக்க இருந்த கருத்து கேட்கும் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.