மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது 6 மோட்டார் சைக்கிள்கள், 5 பவுன் நகை பறிமுதல்
திருவாரூரில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 5 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவாரூர்,
திருவாரூர் பகுதியில் நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு மற்றும் வீடு புகுந்து திருடுபவர்களை கைது செய்ய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் மேற்பார்வையில், திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில், போலீசார் பஸ் நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்கள் வந்த வாகனத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் போலீசார் அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் அவர்களில் ஒருவர் குடவாசல் பகுதியை சேர்ந்த செந்தில்(வயது 36) என்றும் மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் என்றும் இவர்கள் இருவரும் சேர்ந்து
திருவாரூர், குடவாசல், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு, பெண்களிடம் சங்கிலி பறிப்பு, வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு போன்ற பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து செந்தில், 18 வயது சிறுவன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்கள், 5 பவுன் நகைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.