குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
ஆலங்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங் களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நம்பன்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் ஒரு ஆழ்துளை கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் நம்பன்பட்டியில் உள்ள ஆலங்குடி-ஆதனக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் சதாசிவம், ஊராட்சி செயலாளர் முருகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மின்மோட்டாரில் உள்ள பழுதை சரிசெய்து உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.