பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க கோரி போராட்டம் டாஸ்மாக் பணியாளர்கள் 31 பேர் கைது
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க கோரி திருச்சியில் மறியல் போராட்டம் நடத்திய டாஸ்மாக் பணியாளர்கள் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி,
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக திருச்சி மற்றும் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும், காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், ஓய்வு பெறும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாக வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கோரிக்கைகளை விளக்கி டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள் கோவிந்தராஜன், கல்யாணசுந்தரம், திருச்சி மாவட்ட அமைப்பாளர் பெருமாள் ஆகியோர் பேசினார்கள்.
மறியல்
இதனை தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை கைது செய்தனர். மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.