போராட்டம் நடத்தினால் 7 ஆண்டு சிறை: கவர்னர் மாளிகையின் அறிவிப்பு மிரட்டும் விதமாக உள்ளது
போராட்டம் நடத்தினால் 7 ஆண்டு சிறை என்கிற கவர்னர் மாளிகையின் அறிவிப்பு மிரட்டும் விதமாக உள்ளது என்று கரூரில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
கரூர்,
கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டுவது உள்ளிட்ட போராட்டம் நடத்தினால் 7 ஆண்டு சிறை தண்டனை என்பது மிரட்டும் விதமாக உள்ளது. இது ஜனநாயக நாடா? அல்லது பாகிஸ்தானை போல் அதிபர் ஆட்சி உள்ள நாடா? என்று எண்ண தோன்றுகிறது. வேண்டும் என்றால் போராட்டம் நடத்துபவர்கள் மீது வழக்கு தொடர்ந்து கொள்ளலாம். மேலும் தமிழக கவர்னர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. அதற்குரிய விசாரணை கமிஷனை அவரே அமைத்திருப்பது நியாயமில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ? இல்லையோ? கவர்னர் இடையில் புகுந்து உரிமையை பறிக்கும் விதத்தில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. மேலும் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி, அவரை பிரபலமாக்க நாங்கள் விரும்பவில்லை.
ஆட்சிக்கு யாரும் எதிர்ப்பு குரல் கொடுக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி அரசு நினைக்கிறது. இதையெல்லாம் மக்கள் தூக்கி வீசுகிற காலம் வெகுவிரைவில் வரும். தேர்தல் வரும்போது தக்க நேரத்தில் கூட்டணி பற்றி நாங்கள் முடிவு எடுப்போம். அது அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.செந்தில்பாலாஜி, கரூர் மத்திய நகர செயலாளர் ஆர்.எஸ்.ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.