“பசுமை சாலை பிரச்சினையில் முழு யானையை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்” வேல்முருகன் குற்றச்சாட்டு
“பசுமை சாலை பிரச்சினையில் முழு யானையை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்“ என்று நாகர்கோவிலில் அளித்த பேட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டினார்.
நாகர்கோவில்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடந்தது.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வேல்முருகன் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அவர் நாகர்கோவிலில் தங்கி இருந்து தினமும் காலை 10 மணிக்கு கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து வேல்முருகன் புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
கோர்ட்டு உத்தரவுப்படி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் போராட்டத்துக்காக என் மீது எத்தனை வழக்குகளை பதிவு செய்தாலும், அடக்குமுறையை கையாண்டாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். சுங்கச்சாவடிக்கு எதிரான போராட்டத்தை, கவர்னருக்கு எதிரான போராட்டம் என அனைத்து போராட்டங்களிலும் தமிழக காவல்துறை நிதானம் இழந்து என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
கவர்னர், அவரது அதிகாரத்தை மீறி ஆய்வு நடத்தி வருகிறார். அவரை பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டு சிறை என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். ஆனால் அதைக்கண்டு தமிழக மக்கள் பயப்படமாட்டார்கள். மத்திய அரசு தமிழக கவர்னரை சூப்பர் முதல்வராக ஆக்கி தமிழகத்தை ஆள்கிறது.
பன்னாட்டு முதலாளிகள் பணம் சம்பாதிப்பதற்காக பசுமை நிறைந்த பகுதிகளை அழித்து பசுமை சாலை என்ற 8 வழிச்சாலையை கொண்டுவர முயற்சிக்கின்றனர். பசுமை வழிச்சாலையை 99.9 சதவீத மக்கள் எதிர்க்கிறார்கள். ஆனால் இந்த சாலை அமைக்க மக்கள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
முழு பூசணிக்காயை தான் சோற்றில் மறைப்பதாக கூறுவார்கள். ஆனால் பசுமை வழிச்சாலை பிரச்சினையில் தமிழக அரசு முழு யானையையே சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள். தமிழக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் சேலம்-சென்னை 8 வழிச்சாலையை சுங்கச்சாவடி இல்லாமல் அமைக்க முடியுமா?
மத்திய அரசுக்கு விசுவாசம் காட்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு, மக்களுக்கு பதில் செல்ல வேண்டிய காலம் விரைவில் வரும்.
மக்களுக்காக போராட்டம் நடத்துபவர்களை நக்சலைட்டுகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் கூறும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அதற்கு தகுந்த ஆதாரத்தை வெளியிட வேண்டும்.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.