ரெயில்வே சுற்றுலா நிறுவனத்தில் வேலை
ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தின் தெற்கு மண்டலத்தில் சூப்பிரவைசர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனம் சுருக்கமாக ஐ.ஆர்.சி.டி.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் தெற்கு மண்டலத்தில் சூப்பிரவைசர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 120 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது 2 ஆண்டு ஒப்பந்த கால பணியாகும். சென்னை ஓட்டல்மேனேஜ்மென்ட் மையம் மற்றும் பெங்களூரு, திருவனந்தபுரம் மையங்களில் நேர்காணல் நடத்தப்பட்டு இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். பி.எஸ்சி. (ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஓட்டல் அட்மினிஸ்ட்ரேசன்) பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
நேரடி நேர்காணல் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
சென்னையில் இன்று (25-6-2018) தேதியிலும், பெங்களூருவில் 27-6-2018 அன்றும், திருவனந்தபுரத்தில் 29-6-2018 அன்றும் நேர்காணல் நடக்கிறது.
விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை நிரப்பி, புகைப்படங்கள், அடையாள அட்டை, கல்விச்சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றுகளுடன் நேரில் ஆஜராக வேண்டும். சென்னையில் தரமணியில் உள்ள சி.ஐ.டி. வளாகத்தில் நேர்காணல் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நேர்காணல் நடக்கிறது. விண்ணப்பதாரர்கள் http://www.ihmchennai.org என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை அறிந்து கொண்டு நேர்காணலில் பங்கேற்கலாம்.