மின்தொகுப்பு நிறுவனத்தில் அதிகாரி வேலை

பவர்கிரிட் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

Update: 2018-06-25 06:50 GMT
மத்திய மின்தொகுப்பு கழக நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேசன் நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெயினி (அதிகாரி )பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. எக்சிகியூட்டிவ் டிரெயினி பணிக்கு 47 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. (சி.எம்.ஏ.) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 30-6-2018-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ரூ.500 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பத்தை வரும் 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மற்றொரு அறிவிப்பின்படி இதே நிறுவனத்தில் எச்.ஆர். பணிக்கு 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜூலை நெட் தேர்வின் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. எம்.பி.ஏ. மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பு படித்துவிட்டு, ஏற்கனவே நெட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 1-ந் தேதி முதல், 31-ந் தேதி வரை இதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் இது பற்றிய விவரங்களை http://www.powergridindia.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்