பிளாஸ்டிக் பொருட்கள் தடையால் ரூ.15 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு; 3 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழப்பு

பிளாஸ்டிக் பொருட்கள் தடையால் ரூ.15 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதோடு, சுமார் 3 லட்சம் பேர் வேலையை இழந்து இருப்பதாக பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாள ர்கள் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.

Update: 2018-06-24 22:30 GMT
மும்பை, 

பிளாஸ்டிக் பொருட்கள் தடையால் ரூ.15 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதோடு, சுமார் 3 லட்சம் பேர் வேலையை இழந்து இருப்பதாக பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாள ர்கள் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் பொருட்கள் தடை

மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு, விற்பனை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. தடையை மீறுபவர்களுக்கு முதல்முறை ரூ.5 ஆயிரமும், இரண்டாம் முறை ரூ.10 ஆயிரமும், அதன் பின்னர் 3 மாதம் சிறை தண்டனையுடன் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு தடையை மீறுபவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். நாட்டின் பொருளாதார தலைநகரமாக கருதப்படும் மும்பையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது நாட்டின் ஜி.டி.பி.யில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

3 லட்சம் வேலைவாய்ப்புகள்

இந்தநிலையில் இந்திய பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் நீமித் புனமியா இது குறித்து கூறியதாவது:-

மராட்டியத்தில் பிளாஸ் டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை யால் ரூ.15 ஆயிரம் கோடி வரையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 3 லட்சம் பேர் ஒரே இரவில் வேலைவாய்ப்புகளை இழந்து உள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 500 வியாபாரிகள் தங்களது கடைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இது மிகவும் பாரபட்சமான முடிவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்