சர்னிரோட்டில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து வீடுகள் எரிந்து நாசம்

சர்னிரோட்டில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடத்தில் உள்ள வீடுகள் எரிந்து நாசமாகின.

Update: 2018-06-24 22:45 GMT
மும்பை, 

சர்னிரோட்டில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடத்தில் உள்ள வீடுகள் எரிந்து நாசமாகின.

கட்டிடத்தில் தீ விபத்து

மும்பை சர்னிரோடு பகுதியில் கோத்தாரே என்ற மூன்று மாடி குடியிருப்பு உள்ளது. நேற்று மாலை இந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையே தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் அதிலிருந்து கரும்புகை குபுகுபுவென வெளியேறியது.

சிறிது நேரத்தில் தீ மூன்றாவது மாடிக்கும், கூரை ேபாடப்பட்டு உள்ள அந்த கட்டிடத்தின் மொட்டை மாடிக்கும் பரவியது.

தீயை அணைக்க போராட்டம்

இந்த தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் 8 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினார்கள். வெகுநேரத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வந்து அணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த விபத்தில் வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாமாகின. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை மேற்கொண் டுள்ளனர்.

மேலும் செய்திகள்