பக்கிங்காம் கால்வாயில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்
சென்னை பல்கலைக்கழகத்துக்கு பின்புறம் உள்ள நாவலர் நகர் பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதன் அருகே பக்கிங்காம் கால்வாய் இருக்கிறது.
சென்னை,
இதில் ஒரு காலத்தில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக தண்ணீர் ஓடியது. காலப்போக்கில் அதில் சாக்கடை நீர் கலந்து மாசு ஏற்பட்டு குப்பைக்கூளமாக மாறிவிட்டது.
இந்த நிலையில் நாவலர் நகர் அருகே இருக்கும் பக்கிங்காம் கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அடிக்கடி நோய் பரவும் சூழல் ஏற்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறைக்கு அந்த பகுதி பொதுமக்கள் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த திலகவதி என்ற பெண் கூறுகையில், ‘கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த கால்வாயில் கிடந்த குப்பைகளை அகற்றினார்கள். ஆனால் அதன் பிறகு அகற்றாமல் இப்போது பிளாஸ்டிக் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன. இதனால் பச்சிளம் குழந்தைகள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொசுத்தொல்லையால் அவதிப்படுகின்றனர். இங்கே கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் நாங்கள் போட்டது கிடையாது. எங்கேயோ இருந்து சாக்கடை நீரில் அடித்து கொண்டு வரப்பட்டு இங்கே சேருகிறது. இதை சம்பந்தப்பட்ட துறை உடனே அகற்ற நடவடிக்கை வேண்டும்’ என்றார்.