கல்லூரி பஸ் மோதி வடமாநிலத்தை சேர்ந்தவர் பலி
வண்டலூர் அருகே கல்லூரி பஸ் மோதி வடமாநில வாலிபர் பலியானார். விபத்து ஏற்படுத்திய பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வண்டலூர்,
வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் அருகே உள்ள கல்குவாரியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் ராஜ் என்கிற ராஜேஷ்கான் (வயது 40). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். நேற்று முன்தினம் இரவு கொளப்பாக்கத்தில் காய்கறிகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு செல்வதற்காக கொளப்பாக்கம் அருகே சாலையை கடந்தார். அப்போது வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி 50 மாணவ-மாணவிகளுடன் சென்ற சத்தியபாமா கல்லூரி பஸ் கண் இமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜ் உயிரிழந்தார்.
இதையடுத்து கல்லூரி பஸ் டிரைவர் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதனால் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி பஸ் மோதி உயிரிழந்து சாலையில் கிடந்த ராஜின் உடலை கைப்பற்றி சாலை ஓரமாக வைத்துவிட்டு பஸ்சில் இருந்த கல்லூரி மாணவ-மாணவிகள் 50 பேரை வேன் மூலம் சத்தியபாமா கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நின்று கொண்டிருந்த விபத்து ஏற்படுத்திய கல்லூரி பஸ்சை போலீஸ்காரர் ஒருவர் சிறிது தூரம் ஓட்டிச்சென்றார். அப்போது அந்த பஸ்சில் இருந்து புகை வந்தது.
இதனை பார்த்த மற்றொரு போலீஸ்காரர் பஸ்சை உடனே நிறுத்தும்படி கூச்சலிட்டார். இதனையடுத்து பஸ்சை உடனே சாலை ஓரமாக நிறுத்திவிட்டு போலீஸ்காரர் பஸ்சில் இருந்து இறங்கி தூரமாக ஓடினார். இதற்கிடையே பஸ் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. உடனே போலீசார் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருந்த பஸ்சின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் பஸ் முழுவமும் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவத்தால் வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.