பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பது தொடர்பான ஆய்வு கூட்டம்
பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது.
திருவள்ளூர்,
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் வாயிலாக 2018-2019 ஆண்டுகளில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ள 10 மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டமும் அடங்கும்.
இதனை கண்காணிக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனை மருத்துவர்களுக்கு பெண் கருக்கொலை மற்றும் பாலினத்தேர்வை தடை செய்தல் சட்டம் 1994-ன்படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான கையேடுகளையும், கருவில் பாலினத்தை கர்ப்பிணி பெண்ணிடமோ, உறவினர்களிடமோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது வேறு ஏதேனும் முறையிலோ அறிவித்தல் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994 பிரிவு 23-ன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு தண்டனைகள் பதிவு முடியும் வரை மருத்துவ கவுன்சிலில் மருத்துவரின் பெயர் ரத்து செய்யப்படும்.
கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 வருடத்திற்கு மருத்துவ கவுன்சிலில் மருத்துவரின் பெயர் நீக்கப்படும். மீண்டும் அதே மருத்துவர் 2-வது முறை குற்றச்செயலில் ஈடுபட்டால் மருத்துவரின் பெயர் மருத்துவ கவுன்சிலில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன், குடும்பநல துணை இயக்குனர் இளங்கோவன், மாவட்ட சமூக நல அலுவலர் மீனா மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுசுகாதாரம், நோய் தடுப்புத்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் சார்பாக பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பது மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் ஸ்கேன் மைய டாக்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் கூறியதாவது.