திருச்சி விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.17¾ லட்சம் கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.17¾ லட்சம் கடத்தல் தங்க கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றுமுன்தினம் காலை மலேசிய தலைநகர் கொழும்புவில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி உடைமையில் மறைத்து தங்க கட்டிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர், திருச்சியை சேர்ந்த முகமது சித்திக் என்பதும், ரூ.12 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான 411 கிராம் தங்க கட்டிகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் சென்னையை சேர்ந்த இரிக்டின் என்பவர் உடமையில் மறைத்து ரூ.5 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான 170 கிராம் தங்க கட்டிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2 பயணிகளிடம் இருந்தும் மொத்தம் ரூ.17 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறி முதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.