பச்சை தேயிலை மகசூல் தொடர்ந்து அதிகரிப்பு
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை மகசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் மலைகாய்கறிகள் சாகுபடி செய்வதற்கான காலநிலை நிலவுவதால் ஏராளமான விவசாயிகள் உருளைக்கிழங்கு, பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளை அதிகளவில் பயிரிட்டனர். ஆனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க தொடங்கினர். அந்த நேரத்தில் கம்பெனி தேயிலை எஸ்டேட்டுகள் மட்டுமே மேற்கொண்டிருந்த தேயிலை பயிரை மாற்று பயிராக சிறு விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
பணப்பயிரான தேயிலையை பயிரிடுங்கள் என்று விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது. இதன்பேரில் மாவட்டத்தில் சுமார் 65 ஆயிரம் தேயிலை சிறுவிவசாயிகள் தற்போது தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு உள்ளனர். தேயிலை விவசாயத்தின் மகசூல் காலத்தை இரு பிரிவுகளாக பிரித்து உள்ளனர். ஏப்ரல், மே, ஜூன் மற்றும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 6 மாதங்கள் துரித வளர்ச்சி பருவ காலம் என்றும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், மற்றும் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய மாதங்கள் மந்த வளர்ச்சி பருவ காலம் என்றும் பிரிக்கப்பட்டு உள்ளன.
துரித வளர்ச்சி பருவ காலத்தில் பச்சை தேயிலை கொழுந்து வளர்ச்சிக்கு சாதகமான சீதோஷ்ண நிலை இருப்பதால் பச்சை தேயிலை கொழுந்துகள் வளர்ச்சி அதிக அளவில் இருக்கும். மந்த வளர்ச்சி பருவ காலத்தில் காற்று, உறைப்பனி என்று இருப்பதால் பச்சை தேயிலை கொழுந்து வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நீலகிரி மாவட்டத்தில் தற்போது துரித வளர்ச்சி பருவத்திற்கு ஏற்றவகையில் நல்ல மழை பெய்து வருவதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது.
துரித வளர்ச்சி பருவ காலம் இந்த மாதம் இறுதி வரை இருக்கும் என்று உபாசி வேளாண்மை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. இதன்படி தற்போது பச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பு காரணமாக தேயிலைத்தூள் உற்பத்தியும் அதிகரித்து உள்ளது. இதனால் தேயிலை ஏல மையத்தில் தேயிலைத்தூளின் விற்பனை விலையில் வீழ்ச்சி ஏற்படுவதால் பச்சை தேயிலைக்கும் விலை குறைவு ஏற்பட்டு வருகிறது.
கடந்த 23-ந் தேதி வார விலையாக ‘ஏ’ பிரிவு பச்சை தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.23 என்றும், ‘பி’ பிரிவு பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.17 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பச்சை தேயிலையில் துரித வளர்ச்சி பருவ காலம் இருக்கும் வரை விலை வீழ்ச்சி நீடிக்கும் என்று கூறப்படுகிறது.