முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தப்படி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2018-06-24 23:00 GMT
சிவகங்கை,

சிவகங்கை ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்க கூட்டம் ஒன்றிய தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் குமரேசன் வரவேற்று பேசினார். மாநில துணை தலைவர் பாண்டி மாவட்ட செயலாளர் சீமைச்சாமி மற்றும் அழகேசன் சரோஜி முத்துக்குமார் பானுமதி சங்கர நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்தபடி சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக மாதம் ரூ, 9 ஆயிரம் வழங்க வேண்டும்.

பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். உணவு செலவினத்தை ஒரு மாணவருக்கு ரூ7.50 ஆக உயர்ததி வழங்க வேண்டும்.காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ரமணி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்