பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்த விவசாயியின் மனைவியை படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளருக்கு வலைவீச்சு

பயிர்க்கடனுக்கு விண்ணப்பித்த விவசாயியின் மனைவியை படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-06-23 22:33 GMT
புல்தானா, 

பயிர்க்கடனுக்கு விண்ணப்பித்த விவசாயியின் மனைவியை படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பயிர்க்கடனுக்கு விண்ணப்பம்

புல்தானா மாவட்டத்தில் உள்ள ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா’ வங்கி கிளை மேலாளராக பதவி வகிப்பவர் ராஜேஷ் ஹிவசே. இவர் பணியாற்றும் வங்கி கிளைக்கு சம்பவத்தன்று மலகாப்பூர் தாலுகா தட்டாலா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பயிர்க்கடனுக்கு விண்ணப்பிப்பதற்காக தனது மனைவியுடன் வந்தார்.

அப்போது ராஜேஷ் ஹிவசே அந்த விவசாயி மற்றும் அவரது மனைவியின் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தார்.

பாலியல் தொல்லை

இந்தநிலையில் ராஜேஷ் ஹிவசே விவசாயியின் மனைவியை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் தனது வங்கியில் வேலை பார்க்கும் அலுவலக உதவியாளரை விவசாயியின் வீட்டுக்கே அனுப்பி பயிர்க்கடனுடன் சிறப்பு சலுகைகள் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறி படுக்கைக்கு அழைத்துள் ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், வங்கி மேலாளரின் ஆபாச பேச்சை நைசாக செல்போனில் பதிவு செய்து வைத்துக்கொண்டு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து ராஜேஷ் ஹிவசே மற்றும் அவரது அலுவலக உதவியாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து தகவலறிந்த அவர்கள் இருவரும் உடனடியாக தலைமறைவாகினர். தொடர்ந்து போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

அசோக் சவான் கண்டனம்

விவசாயியின் மனைவியை வங்கி மேலாளர் படுக்கைக்கு அழைத்த சம்பவம் மராட்டியத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மராட்டிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறியதாவது:-

பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்த விவசாயியின் மனைவியை மேலாளர் படுக்கைக்கு அழைத்தது அதிர்ச்சியளிக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடியோ, பயிர்க் காப்பீடோ கிடைப்பதில்லை. மேலும் பயிர்க்கடனுக்கு கூட விண்ணப்பிக்க முடிவதில்லை.

இது குறித்த வழக்கை விரைவு கோர்ட்டில் விசாரணை நடத்தி குற்றம் சாட் டப்பட்டவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைக்கப் பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்