குளத்தில் வளர்க்கப்பட்ட மீன்களை திருடி சென்ற கும்பல் போலீஸ் விசாரணை
களியக்காவிளை அருகே குளத்தில் வளர்க்கப்பட்ட மீன்களை திருடி சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
களியக்காவிளை,
களியக்காவிளை அருகே உள்ள மடிச்சல் பகுதியில் காட்டுகுளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள தண்ணீரை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த குளத்தை சுரேஷ்குமார் என்பவர் குத்தகைக்கு எடுத்து மீன் வளர்த்து வருகிறார். இதற்காக அவர் குளத்தின் மடைகளை வலுவாக கட்டி மீன்களை பராமரித்து வந்தார். தற்போது மீன்கள் நன்றாக வளர்ந்து விற்பனைக்கு தயார் நிலையில் காணப்பட்டன.
இந்தநிலையில், சம்பவத்தன்று இரவு ஒரு கும்பல் குளத்தின் மடையை உடைத்து தண்ணீரை திறந்து விட்டு மீன்களை பிடித்து சென்றுள்ளனர். மறுநாள் காலையில் குளத்துக்கு சென்ற சுரேஷ் குமார், மீன்கள் பிடித்து செல்லப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்களை திருடி சென்றதாக கூறியுள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குளத்தில் மீன்களை திருடி சென்ற கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.