புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ‘திடீர்’ சாலை மறியல்
திருப்பத்தூரில் குப்பை கிடங்குக்கு வைக்கப்பட்ட தீயால் புகைமண்டலம் பரவியது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ‘திடீர்’ சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின்ரோட்டில் உள்ள ப.உ.ச. நகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இங்கு நகர் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மாலை அந்த குப்பை கிடங்குக்கு மர்ம நபர்கள் தீவைத்து விட்டனர். இதனால் குப்பைகள் தீயில் மளமளவென எரிந்து துர்நாற்றத்துடன் புகைமண்டலம் பரவியது. இதனால் ப.உ.ச.நகர், அவுசிங் போர்டு பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளித்தன. உடனடியாக அந்த பகுதி பொதுமக்கள் அதுபற்றி நகராட்சி நிர்வாகத்தில் புகார் செய்தனர். எனினும் நகராட்சியினர் அந்த தீயை அணைக்கவோ, புகையை கட்டுப்படுத்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே புகைமண்டலத்தால் அவதியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின்ரோட்டில் ப.உ.ச.நகர் பகுதியில் ‘திடீர்’ சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் நகராட்சி அலுவலர்கள் மற்றும் திருப்பத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குப்பை கிடங்கில் ஏற்பட்டு உள்ள தீயை அணைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
பொதுமக்களின் இந்த ‘திடீர்’ சாலை மறியல் போராட்டம் அந்த பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.