ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
பென்னாகரம்,
கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகள் நிரம்பி வருகின்றன. இதனையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 17-ந்தேதி காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
இதனிடையே கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த மழை குறைந்ததால் காவிரி ஆற்றில் வந்த தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1700 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. கர்நாடக மாநிலத்தில் மீண்டும் கனமழை பெய்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் நேற்று காலை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் சீறி பாய்ந்து ஒகேனக்கல்லை வந்து சேர்ந்தது. இதனால் ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று காலை 9 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பரிசலில் சென்று அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் நடைபாதையை தொட்டவாறு தண்ணீர் சென்றது. இதனால் காவிரி ஆற்றுக்கு செல்லும் நடைபாதை நுழைவு வாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் போலீசார், சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல முடியாதபடி கயிறு கட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தீயணைப்பு படையினர் மீட்புப்பணிக்காக தயார் நிலையில் உள்ளனர்.
ஒகேனக்கல்லை கடந்து தண்ணீர் நேற்று காலை 9 மணியளவில் மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 1,299 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மதியம் வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததன் எதிரொலியாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது. நேற்று காலை நிலவரப்படி 120 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 50.68 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.