மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் துப்பாக்கி சூடு நடத்தி கொள்ளையனை பிடித்த போலீசார் தப்பியோடியவர்களுக்கு வலைவீச்சு

மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் துப்பாக்கி சூடு நடத்தி கொள்ளையனை போலீசார் மடக்கி பிடித்தனர்.

Update: 2018-06-22 22:15 GMT
மும்பை, 

மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் துப்பாக்கி சூடு நடத்தி கொள்ளையனை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கற்கள் வீச்சு

மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள பால்கர் மாவட்டம் வகோபா கின்ட் பகுதி வழியாக சென்ற வாகனங்கள் மீது நேற்று முன்தினம் நள்ளிரவு கொள்ளை கும்பல் ஒன்று சரமாரியாக கற்களை வீசி தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் போலீசார் போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் போலீசாரின் வாகனத்தின் மீதும் கற்களை வீசினர்.

துப்பாக்கி சூடு

இதையடுத்து போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருதற்காக கொள்ளை கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து பீதியடைந்த கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர்.

இருப்பினும் போலீசார் அவர்களை விரட்டிச்சென்றனர். இதில் கும்பலை சேர்ந்த ஒருவனை மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் இருட்டு நிறைந்த பகுதிக்குள் ஓடி தப்பி சென்றனர். தப்பியோடிய கொள்ளை கும்பலை சேர்ந்த மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்