ஈரோட்டில் சி.ஐ.டி.யு.வினர் உண்ணாவிரதம்

ஈரோட்டில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஈரோடு மற்றும் கோபி மின் பகிர்மான வட்டக்கிளை (சி.ஐ.டி.யு.)சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது

Update: 2018-06-22 22:30 GMT
ஈரோடு, 

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஈரோடு மற்றும் கோபி மின் பகிர்மான வட்டக்கிளை (சி.ஐ.டி.யு.) சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு ஈரோடு வட்டக்கிளை தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார்.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.380-ம், அடையாள அட்டையும் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் ஈரோடு கிளைச்செயலாளர் ஜோதிமணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்