குறுவை தொகுப்பு திட்டத்துக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் துரைக்கண்ணு தகவல்
தஞ்சை மாவட்டத்திற்கு குறுவை தொகுப்பு திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் துரைக்கண்ணு தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் துரைக்கண்ணு பேசியதாவது.
2017-18ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் நெல் பயிர் 1 லட்சத்து 71 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, 6 லட்சத்து 54 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி கிடைக்கப்பெற்றது. சிறுதானிய பயிர்கள் 970 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு 9 ஆயிரத்து 70 டன் உற்பத்தியும், பயறு வகை பயிர்கள் 35 ஆயிரத்து 529 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு 34 ஆயிரத்து 463 டன் உற்பத்தி கிடைத்தது. எண்ணெய் வித்து பயிர்களை பொறுத்தவரையில் 12 ஆயிரத்து 170 எக்டேரிலும், கரும்பு 4 ஆயிரத்து 795 எக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டது.
2017-18ம் ஆண்டு குறுவை தொகுப்பு திட்டத்தின் மூலம் 17 ஆயிரத்து 820 விவசாயிகளுக்கு ரூ.17 கோடியே 83 லட்சமும், சம்பா தொகுப்பு திட்டத்தின் மூலம் 21 ஆயிரத்து 484 விவசாயிகளுக்கு ரூ.5 கோடியே 37 லட்சமும் மானியம் வழங்கப்பட்டது. இதர திட்டங்களின் மூலம் 57 ஆயிரத்து 497 விவசாயிகளுக்கு ரூ.9 கோடியே 29 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு, நெல் பயிர் 1 லட்சத்து 77 ஆயிரம் எக்டேரிலும், சிறுதானிய பயிர் 3 ஆயிரம் எக்டேரிலும், பயறு வகைகள் 36 ஆயிரம் எக்டேரிலும், சாகுபடி செய்து 6 லட்சத்து 86 ஆயிரம் டன் உணவு தானிய உற்பத்தி அடைய திட்டமிடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்திற்கு நடப்பு குறுவை சாகுபடிக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீட்டில் குறுவை தொகுப்பு திட்டமும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், விதை கிராம திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.28.25 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டு பண்ணையத் திட்டத்தின் கீழ் 73 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.3 கோடியே 65 லட்சம் மானிய உதவியுடன் வேளாண்மை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டு மேலும் 100 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டு ரூ.5 கோடி மானியத்தில் பண்ணைக்கருவிகள் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத்துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.6 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை பொறியியல் துறைக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான அனைத்து விபரங்களையும் அலைபேசி மூலம் அறிந்து கொள்ள ஏதுவாக தமிழக அரசால் “உழவன் செயலி“ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பாரதிமோகன் எம்.பி., வேளாண்மைத்துறை இணை இயக்குனர் மதியழகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், பால்வள தலைவர் காந்தி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக 978 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 7 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 5 ஆயிரத்து 704 கிராம் தாலிக்கு தங்கத்தினையும் அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.