மணல் அள்ளப்படுவதை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை பகுதியில் மணல் திருட்டைக் கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-22 22:00 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பகுதியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு மணல் அள்ளிக் கொண்டு செல்லும் வாகனங்கள் அந்த பகுதியில் அசுர வேகத்தில் சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மணல் திருட்டைக் கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமரசம் செய்தனர். இதனையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்