துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மத்திய-மாநில அரசுகளை கண்டித்து பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் விவசாய தொழிலாளர்கள் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் செங்கோலன் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு தலா ரூ.1 கோடி நிதி உதவி அளிக்க வேண்டும். குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதில் மாநில நிர்வாகிகள் மன்னர்மன்னன், ராசித் அலி, வக்கீல் ஸ்டாலின், மாவட்ட செய்தி தொடர்பாளர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். முடிவில் நகர செயலாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.