ரெயில்வேக்கு சொந்தமான ரூ.16½ லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் கைது குஜராத்தில் பிடிபட்டனர்
ரெயில்வேக்கு சொந்தமான ரூ.16½ லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில்5 பேர் குஜராத்தி ல்வைத்துகைது செய்யப்பட்டனர்.
மும்பை,
ரெயில்வேக்கு சொந்தமான ரூ.16½ லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில்5 பேர் குஜராத்தி ல்வைத்துகைது செய்யப்பட்டனர்.
ரெயில்வே பணம் கொள்ளை
மும்பை மான்கூர்டு பகுதியில்தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் வேனை மர்மகும்பல் ஒன்று வழிமறித்தது. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வேனில் இருந்த பாதுகாவலர்கள் 3 பேரை சரமாரியாக தாக்கி, துப்பாக்கி முனையில் அந்த வேனில் இருந்த ரெயில்வேக்கு சொந்தமான ரூ.16 லட்சத்து 58 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து மான்கூர்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவந்தனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்ட போது, கொள்ளையர்கள் கோவண்டி ரெயில் நிலையத்தில் இருந்து பன்வெல் நோக்கி செல்லும் மின்சார ரெயிலில் ஏறும் காட்சி பதிவாகி இருந்தது.
5 பேர் கைது
இதையடுத்து பன்வெலில் இருந்து கொள்ளையர்கள் நீண்டதூர ரெயிலில் வெளிமாநிலத்திற்கு தப்பிச்சென்றிருக்கலாம் என கருதிய போலீசார் கொள்ளையர்கள் பற்றி தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இதில், இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் குஜராத் மாநிலம் வல்சாட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து பணம், செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர்கள் காட்கோபரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது ஜாஹீர்(வயது40), பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்த விஜய் துலிபந்த்(38), தலோஜாவை சேர்ந்த டேவிட் மணி லாரன்ஸ்(33), பன்வெலை சேர்ந்த ஜகதீஷ்(49), தானே மும்ராவை சேர்ந்த சந்தோஷ் ராஜ்புத்(30) ஆகியோர் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேலும் 8 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களையும் வலைவீசி தேடிவருகின்றனர்.