பாந்திராவில் பயங்கரம் வயதான தம்பதியை கொன்று நகை, பணம் கொள்ளை கொலையாளிகளுக்கு வலைவீச்சு
பாந்திராவில் வயதான தம்பதியை கொன்று நகை, பணத்தை கொள்ளை யடித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மும்பை,
பாந்திராவில் வயதான தம்பதியை கொன்று நகை, பணத்தை கொள்ளை யடித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மர்ம சாவு
மும்பை பாந்திரா மேற்கு ஏக்தா டிலைட் என்ற கட்டிடத்தில் வசித்து வந்தவர் நானக் கோபால்தாஸ்(வயது85). இவரது மனைவி தயா மக்கிஜா(81). நேற்று காலை தம்பதி இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கணவர், மனைவி இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நகை, பணம் கொள்ளை
போலீஸ் விசாரணையில், அவர்களது வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது. இதன் காரணமாக கொள்ளையடிக்கும் நோக்கத்தில் தான் வயதான தம்பதி இருவரும் மர்ம ஆசாமிகளால் கொலை செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த இரட்டை கொலை, கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.