இடமாறுதலுக்கான கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரிய, ஆசிரியைகள் ஆர்ப்பாட்டம்
இடமாறுதலுக்கான கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரியில் இடைநிலை ஆசிரிய, ஆசிரியைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு முழுவதும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி உள்பட 8 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான இடமாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த இடமாறுதலுக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 300 ஆசிரிய, ஆசிரியைகள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி உள்பட 8 மாவட்டங்களுக்கு நேற்று நடைபெறுவதாக இருந்த இடமாறுதலுக்கான கலந்தாய்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று முன்தினம் நள்ளிரவு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை அறியாமல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலந்தாய்வு கோரி விண்ணப்பித்து இருந்த ஆசிரிய, ஆசிரியைகள் 300 பேர் நேற்று கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு இடமாறுதலுக்கான கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து இடமாறுதலுக்கான கலந்தாய்வு திடீரென்று அவசர, அவசரமாக ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரிய, ஆசிரியைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவரும், ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான சந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- இடைநிலை ஆசிரியர்களுக்கு கிருஷ்ணகிரி உள்பட 8 மாவட்டங்களுக்கு இடமாறுதலுக்கான கலந்தாய்வு திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு கோரி விண்ணப்பித்த ஆசிரிய, ஆசிரியைகள் பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இடமாறுதலுக்கான கலந்தாய்வை மீண்டும் நடத்திட வேண்டும். மறுகலந்தாய்வு நடத்தும் வரையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பிட கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
இதில் வட்டார செயலாளர் கோபால்சாமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டனர்.