திருப்போரூர் முருகன் கோவில் குளத்தில் மூழ்கி சென்னை பெண் சாவு
திருப்போரூர் முருகன் கோவில் குளத்தில் மூழ்கி சென்னை பெண் இறந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவில் குளத்தில் நேற்று இரவு பெண் பிணம் மிதந்தது. இதை பார்த்த பொதுமக்கள் திருப்போரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்த பெண்ணின் செல்போன் குளக்கரையில் இருந்ததால் போலீசார் அதில் உள்ள எண்களை தொடர்பு கொண்டு உறவினருக்கு தகவல் கொடுத்தனர். இதில் இறந்தவர் சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 50) என்பது தெரியவந்தது.
இவர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு, குளத்தில் இறங்கும்போது தவறி விழுந்து இருந்தாரா? இல்லை வீட்டில் குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.