வெவ்வேறு சம்பவங்களில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2018-06-21 20:30 GMT
ஏர்வாடி, 

வெவ்வேறு சம்பவங்களில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஆட்டோ டிரைவர்

நெல்லை மாவட்டம் ஏர்வாடி சேனையர் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகன் (வயது 31) ஆட்டோ டிரைவர். இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய ஆட்டோ கடந்த வாரம் மர்மநபரால் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகின்றனர்.

இந்த நிலையில் ஆட்டோ சேதமடைந்ததால் முருகன் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஏர்வாடி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகிரி அருகே தென்மலை பஞ்சாயத்து அருகன்குளம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா (68) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கருப்பாலம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி, வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கருப்பாலம்மாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே கருப்பையா தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.கருப்பையா கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியவாறு கிடந்தார். உடனே அவரை ராஜபாளையம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் கருப்பையா பரிதாபமாக உயிரிழந்தார். 

தொழிலாளி

செங்கோட்டை அருகே லாலாகுடியிருப்பு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் ஜான்சன் (27). இவர் பீடிக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். ஜான்சனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இவர் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு தனது வீட்டுக்கு சென்று, தன்னுடைய குடும்பத்தினரிடம் தகராறு செய்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர்.இதனால் மனமுடைந்த ஜான்சன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் ஜான்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்