பாளை.யில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பாளையங்கோட்டையில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2018-06-21 21:00 GMT

நெல்லை, 

பாளையங்கோட்டையில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் சாலைக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பலர் கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும், பல இடங்களில் கடைகள், கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமித்து உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நெல்லை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயணநாயர் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் அய்யப்பன், உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலையில் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் இருந்து கே.டி.சி. நகர் வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

சுவர்களை இடித்து அகற்றினார்கள்

சமாதானபுரத்தில் உள்ள கடையின் கட்டிடங்களை பொக்லையன் எந்திரத்தின் மூலம் அகற்றினார்கள். மேலும் 50–க்கும் மேற்பட்ட கடைகளுக்கு முன்பு இருந்த கூரைகள், சுவர்களை இடித்து அகற்றினார்கள். இந்த கடைகளை அகற்றுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் தாங்களாகவே முன்வந்து கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.

இந்த ஆக்கிரமிப்பு பணி நடைபெறும்போது ஏதாவது அசம்பாவித சம்பவம் நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்