நெல்லையில் சர்வதேச யோகா தினம்

நெல்லையில் சர்வதேச யோகா தினம் நேற்று நடந்தது.

Update: 2018-06-21 21:15 GMT

நெல்லை, 

நெல்லையில் சர்வதேச யோகா தினம் நேற்று நடந்தது.

சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினத்தையொட்டி நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நெல்லை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று காலையில் யோகா பயிற்சி நடந்தது. இதில் விளையாட்டு வீரர்கள், பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள், பொதுமக்கள் உள்பட 500–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தரையில் விரிப்பு விரித்து யோகா செய்தனர். இந்த யோகாவை நெல்லை மாவட்ட யோகா சங்க செயலாளர் அழகேசராஜா முன்னின்று நடத்தினார்.

இதில் நெல்லை மாவட்ட விளையாட்டு அலுவலர் வீரபுத்திரன், மாவட்ட யோகா சங்க தலைவர் எஸ்.எஸ்.எஸ்.நாதன், நிர்வாகி பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுனர்கள் சத்தியகுமார், வெங்கடேஷ், குமார மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆயுதப்படையில்

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாதுசிதம்பரம் தலைமையில் ஏராளமான போலீசார் யோகா செய்தனர். தேசிய மாணவர் படைவீரர்கள் 500–க்கும் மேற்பட்டவர்கள் யோகா செய்தனர்.

நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நேற்று யோகா தினத்தையொட்டி யோகா பயிற்சி நடந்தது. இதைத்தொடர்ந்து யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கி, யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன், அறிவியல் மைய அலுவலர் முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தண்ணீரில் நீந்தியபடி யோகா செய்த சிறுமி

நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன் மகள் பிரிஷா (வயது 8). இவள் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 4–ம் வகுப்பு படித்து வருகிறாள். இவர் சிறு வயதிலேயே யோகா கற்றும், பயிற்சி எடுத்தும் வந்தார். 5 வயது முதல் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்க பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களையும், பரிசுகளையும் பெற்று உள்ளார்.

இந்த நிலையில் நேற்று யோகா தினத்தையொட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் தண்ணீரில், நீந்தியபடி யோகா செய்தாள். அப்போது வாமதேவ ஆசனம், ஏகபாத வாமதேவ ஆசனம், பத்மாசனம் உள்ளிட்ட ஆசனங்களையும் செய்து காட்டினாள். இதுபார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்து வகையில் இருந்தது. இதைத்தொடர்ந்து சிறுமி பிரிஷாவை பலர் பாராட்டினார்கள்.

மேலும் செய்திகள்