கார்கள் மோதல்; 4 பேர் படுகாயம்

திருவள்ளூர் அருகே கார்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் படுகாயம் அடந்தனர்.

Update: 2018-06-20 22:15 GMT
சென்னை, 

சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி தெருவை சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 36). இவர் நேற்று முன்தினம் தன்னுடைய மனைவி கல்பனாவுடன் (34)  தனது காரில் திருப்பதிக்கு சென்றார். பின்னர் அவர்கள் தங்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த கார் திருவள்ளூரை அடுத்த தொழுவூர் சாலையில் வளைவில் திரும்பும்போது எதிர்திசையில் ஆவடியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த மற்றொரு கார் ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்களது கார் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் 2 கார்களும் சாலையோரம் கவிழ்ந்தன. இதில் சகாயராஜ், கல்பனா படுகாயம் அடைந்தனர். மேலும் மற்றொரு காரை ஓட்டி வந்த ஆவடி காமராஜ் நகர் கணபதி தெருவை சேர்ந்த ஜெயராமன்(56), அவரது நண்பர் சிராஜ்(58) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

 இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காயம் அடைந்த 4  பேரையும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்