மதுபோதையில் வீட்டின் மாடிப்படியில் தவறி விழுந்த டிரைவர் சாவு
புதுக்கடை அருகே மது போதையில் வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
புதுக்கடை,
புதுக்கடை அருகே காப்புக்காடு மேலகளப்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 48). இவர் காப்புக்காடு பகுதியில் உள்ள ஒரு மரஅரவை மில்லில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஸ்டெல்லா (43). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். ஜார்ஜிக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.
இந்தநிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது மது குடித்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர், வீட்டில் இருந்தவர்களிடம் தூங்கச் செல்வதாக கூறி விட்டு வீட்டின் மாடிக்கு செல்ல முயன்றார்.
மதுபோதையில் இருந்த ஜார்ஜ் மாடிப்படியில் ஏறிய போது, திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குடும்பத்தினர் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜார்ஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி ஸ்டெல்லா புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.