கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் வாலிபர் கைது
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தசரதன் (வயது 39). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
கடந்த 11–ந்தேதி காலை தசரதன் வழக்கம்போல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் அவரது மனைவி சுமதி (36), வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். மதியம் வேலை முடிந்து தசரதன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7½ பவுன் நகை மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக நேற்று தண்டலச்சேரி கிராமத்தை சேர்ந்த முரளி (30) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.