கடைமடை பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
கடைமடை பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருச்சிற்றம்பலம்,
கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றின் கடைமடை பகுதியை சென்றடைவது இல்லை. இதனால் கடைமடையில் உள்ள பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம், மதுக்கூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடியில் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.
இப்பகுதியில் குறைந்த அளவே மழைப்பொழிவு உள்ளது. எனவே ஆற்று பாசனத்தை நம்பியே பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். பாசன தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடைமடை பகுதியில் உள்ள ஏரி, குளங்கள், வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் பாலசுந்தரம் கூறியதாவது.
கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கு வருவது இல்லை. கடந்த ஆண்டு தண்ணீர் கிடைக்காததால் கருகிய நெற்பயிர்களை ஆடு, மாடுகள் மேயும் அவலம் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் குளங்கள், ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் வாய்க்கால்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
முறையாக தூர்வாரப்படாததால் வாய்க்கால்கள் புதர் மண்டி கிடக்கின்றன. குளங்களும் தண்ணீரின்றி வறண்டு விட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களை தூர்வாரவும், குளங்களில் தண்ணீர் நிரப்பவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வாரும் பணிக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.