தூத்துக்குடியில் தி.மு.க. சார்பு அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது

தூத்துக்குடியில் தி.மு.க. சார்பு அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

Update: 2018-06-19 21:00 GMT

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் தி.மு.க. சார்பு அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.விற்கு உட்பட்ட அனைத்து கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடக்க உள்ளது.

இந்த கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

வளர்ச்சி பணி

கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.விற்கு உட்பட்ட இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, மகளிரணி, மகளிர் தொண்டர் அணி, மீனவர் அணி, இலக்கிய அணி, வக்கீல் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, நெசவாளர் அணி, பொறியாளர் அணி, வர்த்தகர் அணி, கலை–இலக்கிய பகுத்தறவு பேரவை, சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு, ஆதி திராவிட நல அணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். இந்த கூட்டத்தில் கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்