முன்னாள் தலைமை செயலாளர் வீட்டில் வைர, தங்க நகைகள் உள்பட ரூ.25 லட்சம் பொருட்கள் திருட்டு
பெங்களூருவில் கர்நாடக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் வீட்டில் வைர, தங்க நகைகள் உள்பட ரூ.25 லட்சம் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட், 6-வது செக்டாரில் வசித்து வருபவர் கவுசிக் முகர்ஜி. இவர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். மேலும் கர்நாடக அரசின் முன்னாள் தலைமை செயலாளராகவும் கவுசிக் முகர்ஜி பதவி வகித்துள்ளார். கடந்த 16-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு புறப்பட்டு சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள், கவுசிக் முகர்ஜியின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவில் இருந்த தங்க, வைர நகைகள், பணம், விலை உயர்ந்த பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். வெளியூரில் இருந்து நேற்று முன்தினம் கவுசிக் முகர்ஜி பெங்களூருவுக்கு திரும்பி வந்தார். அப்போது அவர் வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு, நகைகள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் கைரேகை நிபுணர்களுடன் கவுசிக் முகர்ஜிக்கு வீட்டிற்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்த தங்க நகைகள், வைர கம்மல்கள், பணம், 6 விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள், 2 விலை உயர்ந்த பேனாக்கள் உள்பட ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். மேலும் மர்மநபர்களை கண்டுபிடிக்க கவுசிக் முகர்ஜி வீடு மற்றும் அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.