ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும் என்று வசந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.
நெல்லை,
முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாள் விழா நேற்று பாளையங்கோட்டையில் நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் தலைமை தாங்கினார். வசந்தகுமார் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கக்கன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள அமில கழிவுகள் அகற்றப்படும் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார். அந்த ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கையாகும். அந்த கோரிக்கையை ஏற்று ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும். இந்த நேரத்தில் அந்த ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள், அதிகாரிகள், பணியாளர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் மாற்று வேலை வழங்கவேண்டும்.
தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய ஒரு கூட்டத்தை கூட்டி தாமிரபரணி ஆற்றில் எந்த இடத்தில் கழிவுகள் கலக்கிறது என்பதை பார்த்து அதை தடுக்க எவ்வாறு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆய்வு நடத்தவேண்டும்.
நெல்லை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தாமிரபரணி ஆற்றில் உறைகிணறுகள் உள்ள பத்தமடை, சீவலப்பேரி பகுதியில் தடுப்பணைகள் கட்டவேண்டும். நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய சிறப்பு பயிற்சி அளிக்கவேண்டும். தனியார் வேலை வாய்ப்பு முகாம் அமைக்கவேண்டும்.
வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த பணி விரைவில் முடிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து உள்ளார். அந்த பணியை துரிதப்படுத்தி அடுத்த ஆண்டுக்குள் முடிக்கவேண்டும். குளங்களின் கரைகளில் பனை மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும். குளங்களில் மராமத்து பணி நடக்கும் இடங்களுக்கு பொதுமக்கள் சென்று பணியை பார்வையிட்டு குறைகளைசுட்டிக்காட்ட வேண்டும்.
தமிழகத்தில் கல்வியில் புதிய மாற்றங்கள் கொண்டு வருவது சிறப்பாக உள்ளது. அமைச்சர் செங்கோட்டையனின் பணி சிறப்பாக உள்ளது. ஆனால் தொழிற் வளர்ச்சி குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.