கூடுவாஞ்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த குமிழி ஊராட்சியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருந்து வரும் தாழ்த்தப்பட்ட பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி நேற்று காலை கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற செயலாளர் கேது என்ற தென்னவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மாஸ்டர் ஆனந்தன், கோ.முத்தையா, திராவிடமுரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காஞ்சீபுரம் மண்டல செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன், மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட செயலாளர் தமிழரசன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.