கொடைக்கானலில் தொடரும் குற்ற சம்பவங்கள்: காலியாக உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

கொடைக்கானலில் தொடரும் குற்ற சம்பவங்கள்: காலியாக உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-06-18 21:45 GMT

கொடைக்கானல்,

கொடைக்கானலில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முருகானந்தம் என்பவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் தேனி நகருக்கு மாற்றப்பட்டார் அதனை தொடர்ந்து இதுவரை இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

பல வழக்குகளில் துப்பு துலங்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்ய முடியாத நிலை உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த கொடைக்கானல் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளதால் பல்வேறு தரப்பினரும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். எனவே குற்றச்செயல்களை தடுக்க காலியாக உள்ள இன்ஸ்பெக்டர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்