சாலையை ரூ.2 கோடியில் மேம்படுத்தும் பணி - அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்
லத்துவாடி-வகுரம்பட்டி இடையிலான சாலையை ரூ.2 கோடியில் மேம்படுத்தும் பணியை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.
நாமக்கல்,
நாமக்கல்-மோகனூர் சாலையில் லத்துவாடியில் இருந்து திருச்சி சாலையில் வகுரம்பட்டிக்கு இணைப்பு சாலை ஒன்று உள்ளது. சுமார் 1.80 கி.மீட்டர் தொலைவிலான இந்த சாலை தற்போது 7 மீட்டர் அகலத்தில் உள்ளது. இதை 10 மீட்டர் சாலையாக அகலப்படுத்தி, மேம்பாடு செய்யும் பணிகள் ஒருங்கிணைந்த சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த சாலை மேம்பாட்டு பணியை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.