தாயில்பட்டி பகுதியில் குப்பைமேட்டில் கொட்டப்படும் பட்டாசு கழிவுகள்

தாயில்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்போர் கழிவுகளை மூடைமூடையாக குப்பைமேட்டில் போட்டுவிட்டு செல்கின்றனர்.

Update: 2018-06-16 22:30 GMT

தாயில்பட்டி,

மாவட்டத்தில் முறையாக அனுமதிபெற்று இயங்கும் 800–க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளைல் அங்குள்ள கழிவுகள் முறையாக கையளப்படுகின்றன. ஆனால் தாயில்பட்டி பகுதியில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரிப்போர் கழிவுகளை குப்பைமேட்டில் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து போட்டுச்செல்கின்றனர்.

அனுமதி ஏதுமின்றி கிடைத்தவரை லாபர் என்ற கொள்கையோடு குறைந்த செலவில் பட்டாசு தயாரித்து ஏஜெண்டுகள் மூலமாக வெளியூர் வியாபாரிகளிடம் இவர்கள் பாட்டாசுகளை விற்கின்றனர். இதனை கட்டுப்படுத்த போலீசார் எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. எத்தனை கெடுபிடி விதித்தாலும் அதை மீறி பட்டாசு தயாரிக்கின்றனர்.

பட்டாசு கழிவுகளை இரவில் மூடையாக கட்டி கீழகோதைநாச்சியார்புரம், தாயில்பட்டியில் ஊராட்சி சார்பில் குப்பை சேகரிக்கும் இடங்களில் போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். சிலர் தீவைத்தும் கொளுத்துகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசு படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு இவ்வாறு கொட்டப்பட்ட பட்டாசுகள் கிடந்த இடம் அருகே சென்று ஒருவர் பீடி குடிக்க நெறுப்பு பற்றவைத்தபோது எதிர்பாராத விதமாக தீக்குச்சி கீழே விழுந்து பட்டாசில் பற்றியதில் அந்த நபர் உயிரிழந்தார். இதற்கு பின்னரும் இந்த நிலை மாறவில்லை.

குப்பைமேட்டில் பட்டாசு கழிவுகள் கொட்டப்படுவதை எதிர்த்து அந்த பகுதியினர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அதனால் சிறிது காலம் கழிவுகள் கொட்டப்பட்டமல் இருந்தது. ஆனால் தற்போது இவ்வாறு கொண்டுவந்து போட்டுச்செல்வது அதிகரித்து விட்டது. தீபாவளியை குறிவைத்து திருட்டு பட்டாசு தயாரிப்பு அதிகரித்து இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதில் தொடர்புடைய அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து நல்ல தீர்வு காண வேண்டும் என்று அந்தப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்