ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியை கத்தியால் குத்தி காரை கடத்திய மாணவர் உள்பட 4 பேர் கைது
ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியை கத்தியால் குத்தி காரை கடத்திய மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி லீபுரம் கல்லுவிளை ஆஞ்சநேயர் நகரில் வசிப்பவர் ரவீந்திரன் நாயர் (வயது 78). கேரளாவை சேர்ந்த இவர் அங்கு கல்வி அதிகாரியாக பணியாற்றினார். ஓய்வுக்கு பின் மன அமைதிக்காக கன்னியாகுமரியில் வீடு கட்டியிருந்தார். இவர் கேரளாவில் விடுதியும் நடத்தி வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி மதியம் 3 மணிக்கு ரவீந்திரன் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஒரு கும்பல் அவருடைய வீட்டுக்கு காரில் வந்திறங்கியது. தண்ணீர் கேட்பது போல் நடித்து ரவீந்திரன் வீட்டுக்குள் புகுந்தனர்.
பின்னர் கும்பல் ரவீந்திரன் நாயரிடம் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க தேடினர். ஆனால் அவர்களிடம் ரூ.3 ஆயிரம் மற்றும் ½ பவுன் மோதிரம் மட்டுமே சிக்கியது. இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் ரவீந்திரனை கத்தியால் குத்தி விட்டு 4 வெற்று காசோலைகளில் அவரிடம் கையெழுத்து வாங்கினர். தொடர்ந்து கயிறால் அவரை கட்டிப்போட்டு விட்டு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த காரையும் கடத்தி சென்றனர்.
இந்த துணிகர கொள்ளை தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வம் தலைமையிலான போலீசார் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தோவாளை தெற்கு தெருவை சேர்ந்த மனோஜ் (25), நாசரேத் கோவில் தெரு பீம்சிங் (29), திருச்செந்தூர் அருகே உள்ள ஆழ்வார் திருநகரி செல்வ பெருமாள் (28), சிதம்பரபுரம் தெற்கு கருங்குளம் சுரேஷ் (23) என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் 4 பேரும் ரவீந்திரன் நாயரை தாக்கி பணம், மோதிரத்தை கொள்ளையடித்து விட்டு காரை கடத்தி சென்ற கும்பலை சேர்ந்தவர்கள் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. இவர்களில் பீம்சிங் கல்லூரி மாணவர், செல்வ பெருமாள் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். மனோஜ் மருந்து விற்பனையாளராக பணிபுரிகிறார். இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ரவீந்திரன் நாயர் வீட்டில் நடந்த கொள்ளைக்கு மனோஜ் தான் மூளையாக செயல்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் நடந்த ஒரு கருத்தரங்கில் ரவீந்திரன் நாயரை, மனோஜ் சந்தித்துள்ளார். அப்போது தனக்கு சர்க்கரை வியாதி இருப்பதை தெரிவித்து, ரவீந்திரன் நாயர் மனோஜிடம் மருந்து கேட்டுள்ளார். இதனையடுத்து மனோஜ் ரவீந்திரன் நாயர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். பின்னர் ரவீந்திரன் நாயர் செல்வ செழிப்புடன் இருப்பதையும், அவர் தனியாக வசிப்பதையும் தன்னுடைய நண்பர்களுக்கு மனோஜ் தெரிவித்துள்ளார்.
அவரது திட்டப்படி தான் 7 பேர் சேர்ந்து கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். இந்த தகவல்களை மனோஜ் போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார், கடத்தப்பட்ட காரை மீட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தேடிவருகின்றனர்.