விண்வெளிக்குச் செல்லும் ‘துரியான்’ பழம்!

தாய்லாந்து விஞ்ஞானிகள் ‘துரியான்’ பழத்தை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளனர். அமெரிக்க விண்வெளி நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இது அனுப்பப்பட உள்ளதாம்.

Update: 2018-06-16 09:28 GMT
விண்வெளியில் உணவு தேவை குறித்த ஆய்வுக்கு அங்கு துரியானை அனுப்பும் திட்டத்தில் தாய்லாந்து பங்கேற்கிறது.

துரியான் பழம் தென்ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பழமாகும். மிகவும் கடினமான முட்கள் அடர்ந்த தோல் கொண்ட இந்தப் பழம், மோசமான வாசனை கொண்டது. ஆனாலும் இதன் சுவைக்காக மக்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

இதில் மொத்தம் 9 வகையான பழங்கள் மக்கள் சாப்பிடக்கூடிய விதத்தில் உள்ளன.

தாய்லாந்து விஞ்ஞானிகள் இம்மாத இறுதியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் இந்த துரியான் பழத்தை விண் வெளிக்கு அனுப்பவிருக்கிறார்கள்.

துரியான் பழத்தை விண்வெளியில் சரியாக ஐந்து நிமிடம் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் மிதக்கவிடுவார்கள். பின் அதை மீண்டும் பூமிக்கு சரியான பாதுகாப்போடு கொண்டுவருவார்கள்.

பின் இந்தப் பழத்தை ஒரு மாதம் ஆராய்ச்சி செய்ய தாய்லாந்து விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதன் வெளித்தோல், உள் சதைப் பகுதியில் என்ன மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்று கண்டறிய அந்த ஆராய்ச்சிகள் செய்யப்படும்.

தாய்லாந்து இதன் மூலம் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்கிறது. துரியான் பழத்தை ஆராய்ச்சி செய்து, அதன் மூலம் விண்வெளி உணவுகளைத் தயாரிக்க இருக்கிறது.

விண்வெளியில் உணவு விநியோகம் செய்யும் நாடாக மாற வேண்டும் என தாய்லாந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்