மராட்டியத்தில் அரசு பஸ் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
மராட்டியத்தில் அரசு பஸ் கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
மும்பை,
நாட்டிலேயே மிகப்பெரிய போக்குவரத்து கழகமான மராட்டிய அரசு போக்கு வரத்து கழகத்தில் 18 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். போக்குவரத்து கழகத்துக்கு தினசரி ரூ.2 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்து கழகத்தின் ஆண்டு செலவு ரூ.460 கோடி வரை அதிகரித்துள்ளது. இதுதவிர போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வு காரணமாக ரூ.4 ஆயிரத்து 849 கோடி கூடுதலாக நிதிச்சுமை ஏற்பட்டது.
மேற்கண்ட காரணங் களினால் பஸ் கட்டணத்தை உயர்த்தும் நிலைக்கு மாநில அரசு தள்ளப்பட்டது. மேலும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.
இதனால் மராட்டிய அரசு போக்குவரத்து கழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறிய போக்கு வரத்துத்துறை மந்திரி திவாகர் ராவ்தே பஸ் கட்டணம் உயர்த்தப்படும் என்றார்.
இதன்படி அண்மையில் போக்குவரத்து கழகம் பஸ் கட்டணத்தை 18 சதவீதம் உயர்த்தியது.
15-ந்தேதி முதல் பஸ் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என போக்குவரத்து கழகம் தெரிவித்து இருந்தது. ஆனால் பஸ் கட்டண உயர்வுக்கு நேற்று தான் போக்குவரத்து துறை செயலாளர் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து நள்ளிரவு முதல் பஸ் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
மும்பை தாதர் - புனே இடையே ஏ.சி. சிவ்னேரி பஸ்களில் தற்போது, பயண கட்டணமாக ரூ.430 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் ரூ.510 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. சிவ்சாஹி பஸ்களில் வசூலிக்கப்பட்டு வந்த ரூ.253 கட்டணம் ரூ.300 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
மராட்டியத்தில் தனியார் பஸ்கள் கட்டணத்தை அரசு பஸ் கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் வரை உயர்த்தி கொள்ள மாநில அரசு அண்மையில் அனுமதி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.