கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆய்வு கூட்டம்
கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட 260 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளை நேரில் பார்வையிட்டு, தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைகளை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அப்போது கலெக்டர் கூறியதாவது:- 260 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தியதில் 40 சதவிகிதம் ஊனமுற்ற குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கப்பட உள்ளது. மேலும் செவித்திறன் குறைவாக கொண்ட குழந்தைகளை அடையாளம் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு செவித்திறன் மற்றும் கேட்கும் பயிற்சி கொண்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று பார்வை குறைபாடு கொண்ட படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறிய எழுத்தை பெரியதாக காண்பிக்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு மற்றும் தனி தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.